மாமன்னன் 
சினிமா செய்திகள்

படையிருந்தும் பயந்த சனம்.. ட்ரெண்டாகும் 'மாமன்னன்' பாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாமன்னன்'.இப்படத்தின் முதல் பாடலை வடிவேல் பாடியுள்ளார்.

Nagalekshmi

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மாமன்னன்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

மாமன்னன் போஸ்டர்

இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்பாடல் வெளியாகியுள்ளது. வடிவேல் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த பாடல் "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்ற வரிகளுடன் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.