மலைக்கா அரோரா 
சினிமா செய்திகள்

காதலன் பிறந்த நாளில் போதையில் ஆட்டம் போட்ட மலைக்கா அரோரா

’உயிரே’ படத்தின் "தைய தைய தைய்யா" என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலைக்கா அரோரா.மலைக்கா அரோராவும், அர்ஜுன் கபூரும் லிவிங்டு கெதராக வாழ்ந்து வருகின்றனர்.

மாலை மலர்

மணிரத்னம் இயக்கத்தில் இந்தியில் உருவான 'தில்சே' தமிழில் 'உயிரே' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "தைய தைய தைய்யா" என்ற பாடலுக்கு நடனமாடி மலைக்கா அரோரா தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து வந்தார்.

மலைக்கா அரோரா- அர்ஜுன் கபூர்

1998-ம் ஆண்டில் தயாரிப்பாளர் அர்பாஸ்கானை திருமணம் செய்தார். 2017-ம் ஆண்டு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. பின்பு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரை காதலித்தார். மலைக்கா அரோா, அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் ஆவார். காதலுக்கு எதிர்ப்பு வந்த நிலையில் காதலிக்க வயதில்லை மனசு தான் காரணம் என்று லிவிங்டு கெதராக வாழ்ந்து வருகின்றனர்.

குத்தாட்டம் போட்ட மலைக்கா அரோரா

இந்த நிலையில் அர்ஜுன் கபூரின் 38-வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நண்பர்களுடன் மலைக்காவும் கலந்து கொண்டார். விழாவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதையில் போட்ட குத்தாட்டம் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.