மாதவன் - சித்தார்த் - நயன்தாரா 
சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் இணைந்த மாதவன்-சித்தார்த்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மாலை மலர்

தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டெஸ்ட்

டெஸ்ட்

'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.