மாவீரன் 
சினிமா செய்திகள்

புதிய போஸ்டரை வெளியிட்ட மாவீரன் படக்குழு

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் இரண்டாவது பாடலான 'வண்ணாரப்பேட்டையில' பாடல் நாளை வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன்

மாவீரன்

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

மாவீரன்

மாவீரன்

'மாவீரன்' படத்தின் இரண்டாவது பாடலான 'வண்ணாரப்பேட்டையில' பாடல் நாளை (14-ஆம் தேதி) வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு 'வண்ணாரப்பேட்டையில' பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணைந்த்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.