அல்லு அர்ஜுன் 
சினிமா செய்திகள்

மாமனிதன் படத்தை வெளியிடும் அல்லு அர்ஜுன்.. வைரலாகும் பதிவு..

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன்.மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாலை மலர்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

மாமனிதன் படக்குழு

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இப்படம் விரைவில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் "மாமனிதன் திரைப்படத்தை ஆஹா இணைய வழியில் விரைவில் சந்திக்கலாம். என்னை சமூக வலைதளத்தில் தொடர்ந்து வரும் நெஞ்சங்கள் ஒவ்வொருவரும் ஒரு முறை இப்படைப்பை காணவேண்டுமென விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.