சினிமா செய்திகள்

லவ் டுடே படத்தின் வசூல் இத்தனை கோடியா..! தயாரிப்பாளர் பதிவால் வெளியான உண்மை

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’.சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

மாலை மலர்

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து 'லவ் டுடே' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த படங்களை பட்டியலிட்டிருந்தார். அதில் பிரதீப் ரங்கநாதன் பெயர் இல்லாததை பார்த்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'லவ் டுடே' படமும் ரூ.100 கோடி வசூலித்ததாக பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக தனது இரண்டாவது படத்திலே ரூ. 100 கோடி கிளப்பில் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.