சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சதிஷ் பட மோஷன் போஸ்டர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மாலை மலர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.

வித்தைக்காரன்

வித்தைக்காரன்

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வித்தைக்காரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.