லெஜண்ட் சரவணன் 
சினிமா செய்திகள்

ரஜினியுடன் லெஜண்ட் சரவணன்.. வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'.இப்படத்தின் கதாநாயகியாக இந்தி பட நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியிருந்தார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியிருந்தது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

லெஜண்ட் சரவணன் - ரஜினி

லெஜண்ட் சரவணன் - ரஜினி

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு "சூப்பர் ஸ்டாருடன் தருணங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.