கட்டா குஸ்தி 
சினிமா செய்திகள்

வீடியோ பாடலை வெளியிட்ட 'கட்டா குஸ்தி' படக்குழு

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.இப்படம் மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

கட்டா குஸ்தி

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சண்ட வீரச்சி' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.