காசேதான் கடவுளடா 
சினிமா செய்திகள்

ஜெய் சில்பானந்தா.. வெளியானது காசேதான் கடவுளடா டிரைலர்..

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் காசேதான் கடவுளடா. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

மாலை மலர்

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது இப்படத்தை ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

காசேதான் கடவுளடா

இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சிவாவிற்கே உரிய காமெடி பாணியில் வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.