இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
எமர்ஜென்சி போஸ்டர்
இந்நிலையில், 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கங்கனா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.