சினிமா செய்திகள்

கமல் 237.. அனல் பறக்கும் போஸ்டர்.. இயக்குனர் யார் தெரியுமா?

கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

மாலை மலர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதைத்தொடர்ந்து கமலின் அடுத்த படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கமலின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கமலின் 237-வது படத்தை ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவு இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2025-யில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.