சினிமா செய்திகள்

ஜீவாவின் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' டீசர் ரிலீஸ் அறிவிப்பு

ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா நடிப்பில், பிரபல இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ஜாலியா இருந்த ஒருத்தன்”

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'சிவா மனசுல சக்தி' திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து எம். ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் ஜீவா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் இத்திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்துள்ளார். மேலும், யூடியூப் பிரபலம் 'பரிதாபங்கள்' டீமும் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஆசிஷ் ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

காதல், நகைச்சுவை மற்றும் எமோஷனல் நிறைந்த ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராக இத்திரைப்படம் உருவாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி நாளை (ஜூன் 21) நாளை காலை 11.11க்கு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.