சினிமா செய்திகள்

புதிய பாடலை வெளியிட்ட ஜிகர்தண்டா- 2 படக்குழு

ஜிகர்தண்டா- 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

மாலை மலர்

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தீக்குச்சி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.