ஜப்பான் 
சினிமா செய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் ஜப்பான்?

நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாலை மலர்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜப்பான்

சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் 25 நாள் படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.