பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
ஜான்விகபூர்
இவர் நடித்துள்ள குட்லக் ஜெரி ஜுலை 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். விளம்பர தூதுவரான இவர் பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளர். இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலாகவும் செய்தது.
ஜான்விகபூர்
இந்நிலையில், மும்பையில் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூர் கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.