ஜெயிலர் 
சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்.. அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்

வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

யோகிபாபு - விநாயகன்

யோகிபாபு - விநாயகன்

இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT