நடிகர் அதர்வா நடிப்பில் வரவிருக்கும் 'இதயம் முரளி ' படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த படத்தின் ‘வாம்மா வாம்மா' பாடல் இன்று மாலை 5 மணிக்கு டான் பிக்சர்ஸ் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த பாடலை நடிகர் தனுஷ் குரலில் வெளியானதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆகாஷ் பாஸ்கரன், இந்த படத்தின் கதையை எழுதி, இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார்.
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.தமன் இசையமைப்பாளராக உள்ளார்.
அதர்வாவின் தந்தை நடிகர் முரளியின் கிளாசிக் படமான ‘இதயம்’ நினைவாக, இந்த உணர்வுப்பூர்வமான காதல் கதைக்கு ‘இதயம் முரளி’ என்று பெயரிட்டு இயக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
'இதயம் முரளி' திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன் மற்றும் நிஹாரிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படம் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.