கட்டா குஸ்தி 
சினிமா செய்திகள்

'கட்டா குஸ்தி' ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஷ்ணு விஷால் நடிப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மாலை மலர்

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

கட்டா குஸ்தி

இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.