சினிமா செய்திகள்

ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற 'கண்பத்' டிரைலர்

விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்பத்’.இப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்பத்'. டைகர் ஷெராப், கீர்த்தி சனோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பூஜா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குட் கோ நிறுவனம் சார்பில் வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.

இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'கண்பத்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும் பார்வையாளர்களையும் முழுமையாக பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் உள்ள VFX அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.

SCROLL FOR NEXT