விஜய் - வெற்றிமாறன் - வசந்த பாலன் 
சினிமா செய்திகள்

ரசிகர்களை மகிழ்விக்க வரும் முன்னணி இயக்குனர்கள்

ஜீ5 தளத்தின் “ஒரு ஆசம் தொடக்கம்” தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கவிருக்கும் பல படங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாலை மலர்

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன் பல ஒரிஜினல் தொடர்கள் வரவுள்ளது

புதிய அறிவிப்பு.

இத்தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள் பற்றிய அறிவிப்பு, தமிழ் இயக்குனர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை, “விலங்கு” தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர். 

புதிய அறிவிப்பு

சென்னையில் பிரமாண்டமாக நடந்த “ஒரு ஆசம் தொடக்கம்”  நிகழ்ச்சியில் தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை ஜீ5 அறிவித்தது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர்  “நிலமெல்லாம் ரத்தம்” எனும் தொடரை அறிவித்தார். பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘அனந்தம்’ என்ற தொடர், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் “ கார்மேகம்”  ஆகிய தொடருடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வரவிருக்கும் “பேப்பர் ராக்கெட்” தொடர்கள் இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. 

புதிய அறிவிப்பு

இவை தவிர, ஜீ5 தளத்தில், இயக்குனர் விஜய்யின் ஃபைவ் - சிக்ஸ் - செவன்- எயிட், வசந்த பாலன் இயக்கத்தில் 'தலைமை செயலகம்', எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ‘கொலைகார கைரேகைகள்’, நாகா இயக்கத்தில் 'ஐந்தாம் வேதம்' , ஆகியவையுடன் ‘அல்மா மேட்டர், ‘அயலி’ மற்றும் அருண் விஜய், ப்ரியாபவானி சங்கர் நடிக்கும் ‘யானை’, விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட் மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ள ’தமிழரசன்’ படங்களும் அறிவிக்கப்பட்டது.