சுசிகணேசன் 
சினிமா செய்திகள்

புதிய படத்தை இயக்கும் சுசிகணேசன் - படத்தின் பெயரை வெளியிட்ட படக்குழு

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனராக இருக்கும் சுசிகணேசன் அவருடைய அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டார்.

மாலை மலர்

5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி பின்னர் திருட்டுபயலே, கந்தசாமி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சுசிகணேசன். பிறகு இந்தியில் தற்போது ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ளார். 

இப்பொழுது மீண்டும் தமிழ் திரையுலகிற்கு திரும்பியுள்ள அவர், அடுத்து இயக்கவுள்ள புதிய தமிழ் படத்திற்கு  ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று பெயர் வைத்துள்ளார். 

இப்படம் 1980-களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்டு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவுள்ளார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தை சுசிகணேசனின் 4 வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமே பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இதற்கு முன்பு இந்த தயாரிப்பு நிறுவனம் இந்தியில் இரண்டு படங்கள் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படைப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயாடா’ வெளிவரவுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட உள்ளது.