தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி பிரபலமானார்.
ரத்தம்
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன்
இந்நிலையில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விக்ரம் வேதா பட காட்சியை போன்ற அவர்கள் எடுக்கப்பட்ட ஒரு படத்தை பதிவிட்டு, ஒரு கதை சொல்லட்டா சார்?.. படமே முடியப் போது இப்போ வந்து.. என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.