சினிமா செய்திகள்

ஒரு தல காதல தந்த.. தனுஷ் குரலில் வெளியான வாத்தி பட பாடல்

தனுஷ் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வாத்தி'.இப்படம் உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.

மாலை மலர்

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் ஆன ஒரு தல காதல தந்த பாடலின் தனுஷ் குரலின் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.