செல்வராகவன் - மு.க.ஸ்டாலின் 
சினிமா செய்திகள்

ஒரு சிறப்பான சந்திப்பு.. இயக்குனர் செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்..

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.இவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

மாலை மலர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

செல்வராகவனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், செல்வராகவன் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள இயக்குனர் செல்வராகவன் "மாண்புமிகு முதல்வர் எங்கள் குடும்பத்தை சந்தித்தபோது... என்ன ஒரு சிறப்பான சந்திப்பு" என குறிப்பிட்டுள்ளார்.