சிரஞ்சீவி -நானி 
சினிமா செய்திகள்

'தசரா' படம் பார்த்து வியந்தேன்.. சிரஞ்சீவி பாராட்டு

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தசரா’.‘தசரா’ திரைப்படம் இதுவரை ரூ.110 கோடி வசூல் செய்துள்ளது.

மாலை மலர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிரஞ்சீவி பதிவு

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.110 கோடியை வசூல் செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், 'தசரா' திரைப்படம் பார்த்த நடிகர் சிரஞ்சீவி படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தசரா திரைப்படம் பார்த்தேன். என்ன ஒரு அருமையான படம். இது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் முதல் படம் என்பதை அறிந்து வியந்தேன். எங்களது 'மகாநடி' கீர்த்தி சுரேஷின் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணன் இசையில் அசத்திவிட்டார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.