மு.க.ஸ்டாலின் 
சினிமா செய்திகள்

வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடிவேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மாலை மலர்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடிவேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.