'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த திரைப்படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
பிரமாஸ்திரா
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூர் பிரமாஸ்திரா -2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பிரமாஸ்திரா 2 மற்றும் 3 பண்ண இருக்கிறோம். அதற்கான கதையை இயக்குனர் அயன் முகர்ஜி எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரமாஸ்திரா 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.