பிக்பாஸ் அல்டிமேட் 
சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் - அடுத்த போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் சினேகன் ஜூலியை தொடர்ந்து அடுத்த போட்டியாளர் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது.

அதன்படி போட்டியாளராக சினேகன், ஜூலி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்ததாக வனிதா செல்ல இருக்கிறார். இதற்கான புரமோ இன்று மாலை வெளியாக இருக்கிறது.