வடிவேலு 
சினிமா செய்திகள்

வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் வடிவேலு படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடித்திருக்கிறார்.

மாலை மலர்

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

வடிவேலு - ஷிவானி

சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்.