தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
சீனு ராமசாமி - பாரதிராஜா
தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். மாமனிதன் திரைப்படம் ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது
சீனு ராமசாமி - பாரதிராஜா
இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, சீனு ராமசாமியை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். சீனு ராமசாமி என் மகன் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.