வைபவ் 
சினிமா செய்திகள்

எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்கு.. கவனம் ஈர்க்கும் வைபவ் பட டிரைலர்..

இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் ‘பபூன்’.இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.

பபூன்

மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'பபூன்' திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.