சினிமா செய்திகள்

புதிய போஸ்டரை பகிர்ந்த அயலான் படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’.இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அயலான் போஸ்டர்

இந்நிலையில், 'அயலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டரை பகிர்ந்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.