சினிமா செய்திகள்

'அவதார் -2' இத்தனை கோடி வசூலா..? வியக்க வைக்கும் நிலவரம்..

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அவதார்’. இந்த திரைப்படம் 160 மொழிகளில் சமீபத்தில் வெளியானது.

மாலை மலர்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்து, வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.

அவதார் தி வே ஆப் வாட்டர்

3 ஆஸ்கார் விருதுகளை வென்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் சமீபத்தில் வெளியானது.

அவதார் தி வே ஆப் வாட்டர்

இந்நிலையில், 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.4,200 கோடியும் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.