சினிமா செய்திகள்

ட்ரோல் செய்த 'பத்து தல' பாடலை சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பத்து தல'.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலானது.

இந்நிலையில் 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT