தனுஷ் - அபர்ணா பாலமுரளி 
சினிமா செய்திகள்

தனுஷுடன் இணையும் அபர்ணா பாலமுரளி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

தனுஷ் - அபர்ணா பாலமுரளி

தனுஷ் - அபர்ணா பாலமுரளி

இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் 8 தோட்டாக்கள், சூரரைப் போற்று படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.