அன்னபூரணி 
சினிமா செய்திகள்

பெண்கள் அடக்கப்படும் இடமெல்லாம் ஓர் 'அன்னபூரணி' தேவை.. வெளியான ஃபர்ஸ்ட் லுக்..

நடிகை லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அன்னபூரணி’.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டனர்.

அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரல் நடிக்கும் படம் 'அன்னபூரணி'. இவர்களுடன் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

அன்னபூரணி படக்குழு

பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாக வைத்து திரில்லர் வடிவில் உருவாகியுள்ள 'அன்னபூரணி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அன்னபூரணி ஃபர்ஸ்ட் லுக்

இந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். மேலும், நடிகர் ஜெயம் ரவி, "எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் அன்னபூரணி தேவைப்படுகிறாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.