அஞ்சலி 
சினிமா செய்திகள்

புஷ்பா பட பாணியில் கவர்ச்சி காட்டும் அஞ்சலி

தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தவர் நடிகை அஞ்சலி.சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறினார்.

'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அஞ்சலி

அஞ்சலி

அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்சி15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் 'மச்சேர்லா நியோஜகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த போஸ்டர் ஒன்றை சமூக வலைத்தளத்தில் அஞ்சலி பகிர்ந்துள்ளார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா அணிந்திருந்த கவர்ச்சி உடை போன்று அஞ்சலியின் கெட்டபும் அமைந்திருப்பதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.