மகேஷ் 
சினிமா செய்திகள்

ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் படத்தில் அங்காடித் தெரு மகேஷ்

அங்காடி தெரு படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகர் மகேஷ் தற்போது ஏவாள் என்ற புது படத்தில் நடித்துள்ளார்.

பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். மேலும் மதுமிதா, அக்ஷரா ராஜ், பர்சிதா சின்கா, ஆரத்தி கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர்.

நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன், மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஜித்தேஷ் கருணாகரன் இயக்கி இருக்கிறார்.