சினிமா செய்திகள்

திருசெந்தூர் கோவிலில் அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்

ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

Rahul Gandhi

நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதன்பிறகு கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோஜா கூறியதாவது, "இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் இருக்கிறார். அனைத்து விதமான தேர்தல்களிலும் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்.