மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் அமீர். இவர் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன் மிகப் பெரியவன்'. ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கும் இந்த படத்துக்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசை இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இறைவன் மிகப் பெரியவன் போஸ்டர்
இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்த போஸ்டரில் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.