ஜெயம் ரவி 
சினிமா செய்திகள்

போஸ்டர் வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவித்த ஜெயம் ரவி படக்குழு

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’.இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அகிலன்

இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அகிலன் போஸ்டர்

அதன்படி, 'அகிலன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT