சினிமா செய்திகள்

கோமாளி படத்துல ஜி.வி.பிரகாஷ் நடிச்சிருக்காரா.. வைரலாகும் அடியே டிரைலர்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’.இப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

மல்டிவெர்ஸ் சையின்ஸ் பிக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது வைலாகி வருகிறது.

'அடியே' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT