இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
சமந்தா
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.
சமந்தா
இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமந்தா
மேலும், "எனது நல்ல நண்பர் இயக்குனர் ராஜ் (ஃபேமிலி மேன் புகழ்) சொல்வது போல், ஒருநாள் எப்படி இருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். யசோதா திரைப்பட புரோமோஷனுக்காக ஒருநாள் ராஜிடம் இருந்து கடன் வாங்கி உள்ளேன். 11-ஆம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம்'" என தெரிவித்துள்ளார்.