அஜித் 
சினிமா செய்திகள்

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

மாலை மலர்

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தபு

நடிகை தபு தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.