தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
டெஸ்ட்
'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, நடிகை நயன்தாரா அடுத்ததாக டியூட் விக்கி என்ற யூடியூபர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டு உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.