ஜெயலட்சுமி - சினேகன் 
சினிமா செய்திகள்

சினேகன் அறக்கட்டளையின் பெயரில் மோசடி- நடிகை ஜெயலட்சுமீ மீது வழக்குப் பதிவு

சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது சினேகன் பணமோசடி புகார் மனு அளித்தார்.சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஜெயலட்சுமி - சினேகன்

ஜெயலட்சுமி - சினேகன்

இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்தார். இந்நிலையில், சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.