திவ்ய பாரதி 
சினிமா செய்திகள்

இந்த கேலிகள் என்னை மிகவும் பாதித்தது -நடிகை திவ்ய பாரதி வருத்தம்

பேச்சுலர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் திவ்ய பாரதி.உருவக்கேலி குறித்து இவர் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பேச்சிலர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி. இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் பிக்பாஸில் பிரபலமான முகின் ராவ்வுக்கு ஜோடியாக "மதில் மேல் காதல்" என்கிற படத்தில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.

திவ்ய பாரதி

இந்நிலையில், நடிகை திவ்ய பாரதியை சமூக வலைதளத்தில் பலர் உருவகேலி செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "சமீபகாலமாக நான் உருவக்கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன். எனது உடல் தோற்றம் போலியானது என்றும், எனது இடுப்பு பகுதியில் பேடுகள் வைத்திருக்கிறேன் என்றும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் என்றும் கேலி செய்கிறார்கள்.

திவ்ய பாரதி

நான் எலும்பு கூடுபோல் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். கல்லூரி நாட்களிலும் பலர் என்னை உருவக்கேலி செய்துள்ளனர். இந்த கேலிகள் என்னை மிகவும் பாதித்தது. எனது உடலை வெறுக்கும்படியும் செய்தது. மக்கள் முன்னால் செல்ல பயமாக இருந்தது. மாடலிங்கில் நுழைந்து எனது படங்களை வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்ததும் அதை பார்த்து என் உடல் அமைப்பை பாராட்டினர். இது எனக்கு தைரியத்தை கொடுத்தது. ரசிப்பவர்களும், வெறுப்பவர்களும் எப்போதுமே இருக்கிறார்கள். விமர்சனங்களை பொருட்படுத்தாதவரை நாம் வலிமையாகவும், அன்பாகவும் இருப்போம்" என்றார்.