கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் தந்தை உடலுக்கு நடிகர் சிவா, இயக்குனர் ஏ.எல்.விஜய், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.