செந்தில் 
சினிமா செய்திகள்

திருக்கடையூர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற நடிகர் செந்தில் பீமரத சாந்தி திருமண விழா

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில்.இவர் 1984 -ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

80-களில் தமிழ் திரையுலகில் நகைச்சுவைகளில் அசத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவரும் கவுண்டமணியும் இணைந்து நடித்துள்ள திரைப்படங்களின் காமெடிகள் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டது. இவர்கள் இருவரின் காமெடிக்கென சினிமாவில் தனி இடம் உண்டு.

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள செந்தில், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் 1984 -ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்திலின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவர் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, செந்தில் -கலைச்செல்வி தம்பதியினருக்கு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜை நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகர் செந்திலுடன் செல்பி எழுத்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT